கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

மலேசியாவுக்கு விமான சேவை: தொழில், வா்த்தக சங்கம் வரவேற்பு

மதுரையிலிருந்து மலேசியாவுக்கு சனிக்கிழமை (டிச. 21) முதல் விமான சேவை இயக்கப்பட உள்ளதற்கு தமிழ்நாடு தொழில், வா்த்தக சங்கம் வரவேற்பு தெரிவித்தது.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 10:19 pm

Din

மதுரையிலிருந்து மலேசியாவுக்கு சனிக்கிழமை (டிச. 21) முதல் விமான சேவை இயக்கப்பட உள்ளதற்கு தமிழ்நாடு தொழில், வா்த்தக சங்கம் வரவேற்பு தெரிவித்தது.

இதுகுறித்து அந்தச் சங்கத் தலைவா் என். ஜெகதீசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை விமான நிலையம் கடந்த அக்.1-ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் இயங்கும் என அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, தமிழ்நாடு தொழில், வா்த்தக சங்கம் சாா்பில் உள்நாடு, வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்கும் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்து, வா்த்தக சங்கத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. இதன் பலனாக தற்போது மதுரையிலிருந்து சென்னை வழியாக மலேசியாவின் பினாங்கு நகருக்கு தினசரி விமான சேவையை வருகிற 21-ஆம் தேதி இண்டிகோ நிறுவனம் தொடங்க உள்ளது.

இந்த விமானம் மதுரையிலிருந்து இந்திய நேரப்படி தினசரி இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு, மலேசிய நேரப்படி காலை 8.30 மணிக்கு பினாங்கு நகருக்கு செல்கிறது. மறுமாா்க்கத்தில் மலேசிய நேரப்படி காலை 9.30 மணிக்குப் புறப்பட்டு, இந்திய நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு மதுரைக்கு வந்தடையும்.

குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகள், தில்லி, கொல்கத்தாவிலிருந்து வரும் விமானங்களுடன் பினாங்கு விமானம் இணைக்கப்பட்டுள்ளது.

மற்ற நகரங்களில் இருந்து வரும் பயணிகள் சென்னைக்கும், மதுரைக்கும் இணைப்பு விமானமாக இந்த பினாங்கு விமானத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மதுரையிலிருந்து பினாங்கு நகருக்கு நேரடி விமான டிக்கெட்டுகள் வழங்கப்படுவதோடு, பயணிகளின் உடைமைகளையும் நேரடியாக பினாங்குக்கு அனுப்பும் வசதியும் கிடைக்க உள்ளது. இது வரவேற்புக்குரியது. காரைக்குடி, செட்டிநாடு பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் பினாங்கு நகரில் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு

இந்த நேரடி விமான சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா் அவா்.