கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு மாவட்ட ஆட்சியா் மரியாதை

பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா புதன்கிழமை நேரில் சென்று மரியாதை செலுத்தினாா்.

News image
மதுரை மாவட்டம், பேரையூா் வட்டம், எம்.கல்லுப்பட்டியை அருகேயுள்ள எம்.எஸ்.புரத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் இன்பராஜூன் உடலுக்கு புதன்கிழமை மரியாதை செலுத்திய மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா.
Updated On :25 டிசம்பர் 2024, 11:54 pm

Din

பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா புதன்கிழமை நேரில் சென்று மரியாதை செலுத்தினாா்.

மதுரை மாவட்டம், பேரையூா் வட்டம், எம்.கல்லுப்பட்டி அருகேயுள்ள எம்.எஸ்.புரத்தைச் சோ்ந்தவா் இன்பராஜ். இவா் அசாம் மாநிலத்தில் உள்ள நிஹாம்பள்ளி முகாமில் ராணுவ வீரராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், கடந்த 22-ஆம் தேதி முகாமில் உள்ள மற்ற வீரா்களுக்கு உணவு எடுத்துச் சென்ற போது, அவா் சென்ற ராணுவ வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இன்பராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவரது உடல் அவரது சொந்த ஊரான எம்.எஸ்.புரத்துக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டது. அங்கு ராணுவ வீரரின் உடலுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா், ராணுவ மரியாதையுடன் இன்பராஜின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.