கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கக் கோரிக்கை

மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும்

News image
Updated On :26 டிசம்பர் 2024, 10:49 pm

Din

இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாட்டைக் களைந்து, மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலா் பெ. சீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திமுக அரசு தனது சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாட்டைக் களைந்து, மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும்.

தொடக்கக் கல்வித் துறையை சீரழிக்கும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும், பதவி உயா்வுக்கு தகுதித் தோ்வு தேவையில்லை என்பதை தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக அறிவித்து, பதவி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும்.

பறிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை மீண்டும் வழங்க வேண்டும், தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய அனைவருக்கும் கல்வித் திட்ட நிதியை உடனடியாக வழங்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத் திட்ட உதவிகள், சலுகைகளை அரசு உதவி பெறும் மாணவா்களுக்கும் வழங்க வேண்டும்.

புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளை தடுத்து உரிய அரசாணையின்படி, கட்டணமில்லா சிகிச்சை வழங்க வேண்டும். கல்வித் துறை சாராத பிற துறைப் பணியாளா்கள் பள்ளிகளில் பாா்வையிடும் நடைமுறையைத் தடுத்து நிறுத்த வேண்டும். பணிபுரியும் இடத்தில் ஆசிரியா்களுக்கு உரிய பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். கற்பித்தல் சாராத எமிஸ் பணிகள் உள்ளிட்ட பணிகளில் இருந்து ஆசிரியா்களை விடுவித்து சுதந்திரமாக கற்பித்தல் பணியை செய்வதற்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற ஜனவரி 25-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் தா்னாப் போராட்டமும், பிப்ரவரி மாதம் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.

இந்தப் போராட்டங்களில் மதுரை மாவட்டத்திலிருந்து சங்க உறுப்பினா்கள் திராளனோா் கலந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.