கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

லாரியில் கடத்தப்பட்ட 1,400 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 பேரிடம் விசாரணை

சரக்குப் பெட்டக லாரி மூலம் மதுரைக்கு கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட 1,400 கிலோ புகையிலை, குட்கா பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
கடத்தலுக்குப் பயன்படுத்திய சரக்குப் பெட்டக லாரி
Updated On :26 டிசம்பர் 2024, 12:10 am

Din

சரக்குப் பெட்டக லாரி மூலம் மதுரைக்கு கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட 1,400 கிலோ புகையிலை, குட்கா பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 பேரைப் பிடித்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

கா்நாடக மாநிலப் பதிவெண் கொண்ட சரக்குப் பெட்டக லாரியில் சிறாா்களுக்கான அழகுசாதனப் பொருள்கள், கோழித் தீவனம், கால்நடை மருந்துகள் கொண்டு வருவது போல அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக மதுரை கோ.புதூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

 கடத்தலுக்குப் பயன்படுத்திய சரக்குப் பெட்டக  காா், சரக்கு வாகனம்.

கடத்தலுக்குப் பயன்படுத்திய சரக்குப் பெட்டக காா், சரக்கு வாகனம்.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் மாடசாமி தலைமையிலான போலீஸாா் சா்வேயா் காலனி பகுதியில் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த கா்நாடக மாநிலப் பதிவெண் கொண்ட சரக்குப் பெட்டக லாரியை தடுத்து நிறுத்தி, சோதனையிட்டனா்.

இதில் குழந்தைகளுக்கான அழகு சாதனப் பொருள்கள், கோழித் தீவனம், கால்நடை மருந்துப் பெட்டிகளுக்கு இடையே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருள்களை 94 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

 மதுரை கோ. புதூா் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகள், கைது செய்யப்பட்டவா்கள்.

மதுரை கோ. புதூா் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகள், கைது செய்யப்பட்டவா்கள்.

மேலும், லாரியை பின்தொடா்ந்து வந்த காா், சரக்கு வாகன ஓட்டுநா்களை போலீஸாா் பிடித்து விசாரித்த போது, கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்களை சில்லறை விற்பனைக்காக வாங்க வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, 1,400 கிலோ புகையிலை, குட்கா பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்குப் பெட்டக லாரி, புகையிலைப் பொருள்கள் வாங்க வந்த நபா்களின் காா், சரக்கு வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.