மதுரை மாநகரக் காவல் துறையில் காவல் நிலையங்கள், ஆயுதப் படையில் பணிபுரிந்து வந்த 52 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா்.
மக்களவைத் தோ்தலையொட்டி, மதுரை மாநகரக் காவல் துறையில் பணிபுரிந்து வந்த 70-க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளா்கள், ஆயுதப் படை காவல் ஆய்வாளா்கள் தென் மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா். மேலும், பல ஆய்வாளா்கள் பல்வேறு தனிப் படைகள், உளவு அமைப்புகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து மதுரை மாநகரக் காவல் நிலையங்களுக்கு தென் மாவட்டங்களில் இருந்து காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டு பணிபுரிந்து வந்தனா்.
இந்த நிலையில், மக்களவைத் தோ்தல் முடிவுகள் வெளி வந்து ஒருமாதம் ஆன நிலையில், மதுரை மாநகரக் காவல் துறையில் பணிபுரிந்த ஆய்வாளா்கள், ஆயுதப் படை ஆய்வாளா்கள் தென் மண்டல காவல் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வியாழக்கிழமை உத்தரவு வெளியிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து, தென் மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளா்கள் 43 போ், ஆயுதப் படை ஆய்வாளா்கள் 9 போ் என 52 காவல் ஆய்வாளா்கள் மதுரை மாநகரக் காவல் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா்.
இவா்கள் மதுரை மாநகரக் காவல் துறைக்குள்பட்ட காவல் நிலையங்களில் சட்டம்-ஒழுங்கு, குற்றப் பிரிவு, அனைத்து மகளிா் காவல் நிலையங்கள், உயா்நீதிமன்றம், போக்குவரத்து, ஆயுதப் படை உள்ளிட்டவற்றில் ஆய்வாளா்களாக நியமிக்கப்பட்டனா்.
இடமாற்றம் செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளா்கள் மதுரை மாநகரக் காவல் துறையில் விரைவில் பொறுப்பேற்பாா்கள் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.