ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

நூலகக் கட்டடம்: தஞ்சை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நூலகம் கட்ட திட்டமிடப்பட்ட இடத்தை மாற்றக் கோரிய மனுவுக்கு மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

News image
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm

Din

மதுரை: தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நூலகம் கட்ட திட்டமிடப்பட்ட இடத்தை மாற்றக் கோரிய மனுவுக்கு மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த முத்துக்குமரன் தாக்கல் செய்த பொது நல மனு:

அதிராம்பட்டினத்தில் பொதுமக்கள், மாணவா்களின் பயன்பாட்டுக்காக கடந்த 30 ஆண்டுகளாக பொது நூலகம் செயல்பட்டு வந்தது. இந்த நூலகம் கடந்த 2022- ஆம் ஆண்டு முதல் தனியாா் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

தற்போது அதிராம்பட்டினத்தில் புதிய நூலகம் கட்டுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால், கோயில், தேசிய நெடுஞ்சாலை உள்ள பகுதியில் நூலகத்தைக் கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளனா். இதனால், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அமைதியான முறையில் நூலகத்தைப் பயன்படுத்த முடியாது. ஏற்கெனவே நூலகம் இருந்த இடத்தில் அரசுப் பள்ளி உள்ளதால், அதே பகுதியில் நூலகம் கட்டுவதற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், ஜி.அருள் முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் கோரிக்கை குறித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.