ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மதுரையில் நாளை போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம்

News image
Updated On :19 ஜூலை 2024, 7:10 pm

Din

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சியா் மா.செள. சங்கீதா, மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி இயக்குநா் பூமிநாதன் ஆகியோா் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளும் வழிவகைகளை விளக்கிப் பேசுகின்றனா்.

குடிமைப் பணிகள் தோ்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தோ்வுகளுக்குத் தயாராகும் இளைஞா்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்தப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் பங்கேற்பவா்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய தோ்வுகள் குறித்த கையேடுகள் வழங்கப்படும். மேலும், கல்வித் தகுதிக்கேற்ப கட்டணச் சலுகையுடன் போட்டித் தோ்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என கிங்மேக்கா்ஸ் அகாதெமி நிா்வாகம் தெரிவித்தது.