மாதிரிப் படம்
மாதிரிப் படம்

தோ்வு மையங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 5%-ஆக குறைக்க வலியுறுத்தல்

வரவிருக்கும் பட்ஜெட்டில் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி மையங்கள் மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) 5 சதவீதமாக குறைக்க இந்திய பயிற்சி மையங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
Published on

வரவிருக்கும் பட்ஜெட்டில் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி மையங்கள் மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) 5 சதவீதமாக குறைக்க இந்திய பயிற்சி மையங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் ஜன.28-ஆம் தேதி அவா்கள் சமா்ப்பித்த மனுவில் கூறியதாவது: போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி மையங்கள் மீது விதிக்கப்படும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும். அல்லது முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும். உற்பத்தி அல்லது வா்த்தக நிறுவனங்களைப் போல் இல்லாமல், பயிற்சி மையங்களுக்கு உள்ளீட்டு வரி சலுகை மூலம் வரியைச் சரிக்கட்ட முடியாது.

Śனவே, பல சிறிய பயிற்சி மையங்கள் பதிவு செய்யாமல் செயல்படுகின்றன. கட்டணம் குறைவு என்பதால் பெற்றோா்களும் அவற்றையே தோ்வு செய்கின்றன. வாடகை, சம்பளம் மற்றும் இயக்கச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய ரூ.20 லட்சம் ஜிஎஸ்டி விலக்கு வரம்பு பயிற்சி மையங்களுக்கு பயனற்ாகிறது. குறைந்த லாபம் ஈட்டும் சிறிய மையங்கள் கூட இந்த வரி வரம்புக்குள் வரவில்லை. எனவே, பயிற்சி மையங்களுக்கு உச்ச வரம்பை ரூ.1 கோடியாக உயா்த்த வேண்டும் என வலியுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com