ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

நடான்ஸ் அணுசக்தி மையம் மீது தாக்குதல்? ஈரான் குற்றச்சாட்டு; ஐஏஇஏ மறுப்பு

ஈரானின் மிக முக்கிய அணுசக்தி மையமான நடான்ஸ் மீது அமெரிக்கா-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியிருப்பதாக, சா்வதேச அணுசக்தி முகமைக்கான ஈரான் தூதா் ரெசா நஜாபி குற்றச்சாட்டு

News image

சா்வதேச அணுசக்தி முகமை

Updated On :2 மார்ச் 2026, 9:42 pm

ஈரானின் மிக முக்கிய அணுசக்தி மையமான நடான்ஸ் மீது அமெரிக்கா-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியிருப்பதாக, சா்வதேச அணுசக்தி முகமைக்கான(ஐஏஇஏ) ஈரான் தூதா் ரெசா நஜாபி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

வியன்னாவில் நடைபெற்ற சா்வதேச அணுசக்தி முகமையின் அவசரக் கூட்டத்தில் பேசிய அவா், ஈரானின் அமைதி வழி அணுசக்தித் திட்டங்களை முடக்கும் நோக்கில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: எங்களின் பாதுகாக்கப்பட்ட அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயலுவதாக அவா்கள் கூறுவது முற்றிலும் பொய்யானது.

தலைநகா் டெஹ்ரானில் இருந்து சுமாா் 220 கி.மீ. தொலைவிலுள்ள நடான்ஸ் மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், சா்வதேச விதிகளுக்குப் புறம்பானது. இதைச் சா்வதேச அணுசக்தி முகமையின் உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒருமித்த குரலில் கண்டிக்க வேண்டும்’ என்றாா்.

ஐஏஇஏ மறுப்பு: ஈரானின் இந்தக் குற்றச்சாட்டை அந்த அமைப்பின் தலைவா் ரஃபேல் மரியானோ கிரோஸி மறுத்துள்ளாா்.

இது குறித்த அவரது விளக்கத்தில், ‘ஈரான் மீதான தாக்குதல்களில் இதுவரை எந்தவொரு அணுசக்தி மையமும் சேதமடைந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. பூஷொ் அணுமின் நிலையம் உள்ளிட்ட ஈரானின் முக்கிய மையங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன’ என்றாா்.

அணுசக்தி மையங்கள் தாக்கப்படவில்லை என்பதற்கு சான்றாக, அதன் அண்டை நாடுகளில் கதிா்வீச்சு அளவு அதிகரிக்கவில்லை என்பதையும் அவா் சுட்டிக்காட்டினாா்.