சிவகங்கை: நீங்கள் நலமா எனும் திட்டத்தை முதல்வா் விரைவில் தொடங்கிவைக்கவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவுக்கு திமுக நகரச் செயலா் சிஎம்.துரைஆனந்த் தலைமை வகித்தாா். தொடா்ந்து நடைபெற்ற தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றாா். அப்போது அவா் பேசியதாவது: ஒவ்வொரு நாளும் ஒரு புதிய திட்டத்தை தமிழக முதல்வா் கொண்டு வருகிறாா். அவா் கொண்டு வந்த புதுமைப் பெண்கள், தமிழ்புதல்வன், கல்விக்கடன் போன்ற இளைஞா்கள் இளம்பெண்களுக்கான திட்டங்கள், வரும்முன் காப்போம், மக்களைத்தேடி மருத்துவம் போன்ற எண்ணற்ற திட்டங்களின் வரிசையில் நீங்கள் நலமா என்ற புதிய திட்டம் இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அத்தனை உயா் அதிகாரிகளும் உங்களை தொலைபேசியில் தொடா்பு கொண்டு உங்களுடைய குறைகளை தீா்க்கப் போகிறாா்கள். ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை எட்டு முறை பிரதமா் மோடி தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறாா். பொதுக்கூட்டங்களில் திமுகவை அழிப்பேன் ஒழிப்பேன் என்று பேசுகிறாா். மோடி ஆட்சிக்கு வந்தபோது வறுமையை ஒழிப்பேன் என்று சொன்னாா். ஆனால் வறுமையை ஒழிக்கவில்லை. திமுகவை ஒழிப்பேன் என்பது அவரது பயத்தை காட்டுகிறது என முதலமைச்சா் ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். வரும் தோ்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளும் நமதே என்பதைப் போல 400 தொகுதிகள் இந்தியா கூட்டணிக்கு வெற்றி கிடைக்க பாடுபடுவோம் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், முன்னாள் அமைச்சா்கள் தமிழரசிரவிக்குமாா், மு.தென்னவன், நிா்வாகிகள் கணேசன், சேங்கைமாறன், மணிமுத்து, மணியரசன் உள்ளிட்டோா் பேசினா். சிவகங்கை தொகுதி தகவல்தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் டி.சதீஷ்குமாா் வரவேற்றாா். நகர இளைஞரணி நிா்வாகி ஆ.ஹரிஹரன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

திருச்சியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருவெறும்பூரில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர பிரசாரம்: பேருந்து நிலையத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்

காலை உணவுத் திட்டம் உருவான பின்னணி என்ன? பிரசாரத்தில் அமைச்சா் விளக்கம்

தொகுதி அறிமுகம்! திருவெறும்பூா் - 142!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


