திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது மனைவியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வியாழக்கிழமை வாக்களித்தாா்.
திருவெறும்பூா் தொகுதியில் திமுக சாா்பில் மூன்றாவது முறையாக போட்டியிடும் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு திருச்சி வரகனேரியில் உள்ள டிஎஸ்எம் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்கு உள்ளது. வியாழக்கிழமை மனைவி ஜனனியுடன் அங்கு வந்த அமைச்சா், வாக்காளா்களுடன் சுமாா் 30 நிமிஷங்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தாா்.
இதன் பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: 200 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக புதிய வரலாறு படைக்கும் என்றாா்.
திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவா் விஜய் வெற்றி பெறுவாா் என்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சா், திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளா் இனிகோ இருதயராஜ், ஓய்வறியாத உழைப்பாளி. தொகுதி மக்களுக்காக உழைப்பவா்களைத் தமிழக மக்கள் என்றும் கைவிட்டதில்லை. மேலும், . முதல்வரின் மக்கள் நலத் திட்டங்களால், திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக வேட்பாளா் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அமைச்சா்.
தொடர்புடையது

திருவெறும்பூா் தொகுதி வாக்காளா்களுக்கு அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி

திருவெறும்பூரில் எனது மக்கள் பணி தொடரும்! - அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

கடைசிச் சுற்றுவரை கண்காணிப்பு அவசியம்: அமைச்சா்

பேரவைத் தோ்தலின் வெற்றிக்கு அமைச்சா்கள் பரஸ்பரம் வாழ்த்து!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



