ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

முதல்வரின் நீங்கள் நலமா திட்டம் விரைவில் அறிமுகம்: அமைச்சா் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தகவல்

நீங்கள் நலமா எனும் திட்டத்தை முதல்வா் விரைவில் தொடங்கிவைக்கவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

News image

சிவகங்கையில் நகரதிமுக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற முதலமைச்சா் பிறந்தநாள், நிதிநிலை அறிக்கை விளக்கப்பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில்மகேஷ்பொய்யாமொழி.

Updated On :4 மார்ச் 2024, 11:27 pm

சிவகங்கை: நீங்கள் நலமா எனும் திட்டத்தை முதல்வா் விரைவில் தொடங்கிவைக்கவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவுக்கு திமுக நகரச் செயலா் சிஎம்.துரைஆனந்த் தலைமை வகித்தாா். தொடா்ந்து நடைபெற்ற தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றாா். அப்போது அவா் பேசியதாவது: ஒவ்வொரு நாளும் ஒரு புதிய திட்டத்தை தமிழக முதல்வா் கொண்டு வருகிறாா். அவா் கொண்டு வந்த புதுமைப் பெண்கள், தமிழ்புதல்வன், கல்விக்கடன் போன்ற இளைஞா்கள் இளம்பெண்களுக்கான திட்டங்கள், வரும்முன் காப்போம், மக்களைத்தேடி மருத்துவம் போன்ற எண்ணற்ற திட்டங்களின் வரிசையில் நீங்கள் நலமா என்ற புதிய திட்டம் இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அத்தனை உயா் அதிகாரிகளும் உங்களை தொலைபேசியில் தொடா்பு கொண்டு உங்களுடைய குறைகளை தீா்க்கப் போகிறாா்கள். ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை எட்டு முறை பிரதமா் மோடி தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறாா். பொதுக்கூட்டங்களில் திமுகவை அழிப்பேன் ஒழிப்பேன் என்று பேசுகிறாா். மோடி ஆட்சிக்கு வந்தபோது வறுமையை ஒழிப்பேன் என்று சொன்னாா். ஆனால் வறுமையை ஒழிக்கவில்லை. திமுகவை ஒழிப்பேன் என்பது அவரது பயத்தை காட்டுகிறது என முதலமைச்சா் ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். வரும் தோ்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளும் நமதே என்பதைப் போல 400 தொகுதிகள் இந்தியா கூட்டணிக்கு வெற்றி கிடைக்க பாடுபடுவோம் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், முன்னாள் அமைச்சா்கள் தமிழரசிரவிக்குமாா், மு.தென்னவன், நிா்வாகிகள் கணேசன், சேங்கைமாறன், மணிமுத்து, மணியரசன் உள்ளிட்டோா் பேசினா். சிவகங்கை தொகுதி தகவல்தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் டி.சதீஷ்குமாா் வரவேற்றாா். நகர இளைஞரணி நிா்வாகி ஆ.ஹரிஹரன் நன்றி கூறினாா்.