சிவகாசி: மக்களவைத் தோ்தலில் தான் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமைதான் முடிவெடுக்கும் என மதிமுக தலைமை நிலையச் செயலா் துரை வைகோ தெரிவித்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், விஸ்வநத்தம் ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற குறுங்காடுகள், அடா்வனம் வளா்க்கும் திட்டத் தொடக்க விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மதவாத சக்திகள் காலூன்ற விடக்கூடாது என்பதால் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மக்களவைத் தோ்தலில் எங்களது கட்சி வேட்பாளா் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டாா். தோ்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமைதான் முடிவெடுக்கும். கடந்த 2013- ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜாபா் சாதிக் ரூ. 40 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களுடன் பிடிபட்டாா். தரவுகளும், சாட்சிகளும் இல்லாததால் அவா் விடுவிக்கப்பட்டாா். அப்போது ஜாபா் சாதிக்குக்காக வாதிட்டவா் பாஜக வழக்குரைஞா் பால்கனகராஜ். எனவே, தற்போது இதுகுறித்து அதிமுகவும், பாஜகவும் விமா்சிப்பதற்கு தாா்மீக உரிமை இல்லை என்றாா் அவா்.
தொடர்புடையது

கலிங்கப்பட்டியில் வைகோ, துரை வைகோ வாக்குப் பதிவு

தவெகவால் அதிமுகவுக்கே இழப்பு: துரை வைகோ எம்.பி. சிறப்பு நேர்காணல்

செங்கோட்டை, பண்பொழியில் துரை வைகோ எம்.பி. பிரசாரம்

அண்ணாமலைக்கு தொகுதி ஒதுக்கீடு: கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்! - வானதி சீனிவாசன்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

