15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மருத்துவமனையில் போக்சோ தண்டனைக் கைதி உயிரிழப்பு

மருத்துவமனையில் போக்சோ தண்டனைக் கைதி உயிரிழப்பு

Updated On :12 மார்ச் 2024, 11:21 pm

மதுரை: மதுரையில் போக்சோ வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தவா் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா். விருதுநகா் பாத்திமா நகா் கிருஷ்ணாமாச்சாரியாா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜேசுராஜ் (20).

இவா், கடந்த 2021- ஆம் ஆண்டில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டாா். ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் இவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில், சிறையில் ஜேசுராஜூக்கு திங்கள்கிழமை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

சிறை மருத்துவமனையில் முதலுதவி அளித்த பின்னா், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா்.