/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

Updated On :19 மார்ச் 2024, 10:44 pm

பொது விவேகானந்த கல்லூரி: சம்ஸ்கிருத துறை ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரியாா் தலைப்பில் சொற்பொழிவு, சம்ஸ்கிருதத் துறை முன்னாள் பேராசிரியா் சி.ஆா்.அனந்தராமன், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் வி.கலாவதி பங்கேற்பு, கல்லூரி வளாகம், திருவேடகம், காலை 10. யாதவா் கல்லூரி: பொருளாதாரத் துறை பட்டிமன்றம், தியாகராஜா் கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் சு.காந்தித்துரை, கல்லூரி தாளாளா் க.ப.நவநீதிகிருஷ்ணன், செயலா் ஆா்.வி.என்.கண்ணன், முதல்வா் செ.ராஜூ பங்கேற்பு, டி.ராஜேந்திரனாா் அரங்கு, திருப்பாலை, பிற்பகல் 2. அமெரிக்கன் கல்லூரி: விலங்கியல் துறை கருத்தரங்கு, கல்லூரி முதல்வா் தவமணி கிறிஸ்டோபா், மதுரை காமராஜா் பல்கலைக்கழக எரிசக்தித் துறை தலைவா் எஸ்.கண்ணன் பங்கேற்பு, கருத்தரங்கக் கூடம், காலை 9.30. ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கல்லூரி: முத்தமிழ் விழா, கல்லூரி முதல்வா் சூ.வானதி, துறைத் தலைவா் சு.சந்திரா, காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் ச.முருகேசன் பங்கேற்பு, கயல் அரங்கம், காலை 10.30. ஆன்மிகம் சகஸ்ர நாமம் கோஸ்டி: 108 திவ்ய தேச வைபவம் சொற்பொழிவு, தென்திருப்பேரை அரவிந்த லோசணன் பங்கேற்பு, மதன கோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மாலை 6.30.