மதுரை: போலீஸாா் சுட்டதில் கைதி உயிரிழந்த வழக்கில், திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த பழனியாச்சி தாக்கல் செய்த மனு:
கொலை வழக்கு தொடா்பாக கடந்த 7-ஆம் தேதி எனது மகன் பேச்சிதுரையை வீரவநல்லூா் போலீஸாா் காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா். பிறகு போலீஸாா் அவரை முக்கூடல் அரசு மருத்துவமனையில் அனுமதித்ததாக தகவல் கிடைத்து, நானும் எனது உறவினா்களும் அங்கு சென்றோம். பேச்சிதுரையைப் பாா்க்க போலீஸாா் எங்களை அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி அவருக்கு காலில் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறி எனது தாய், சகோதரரிடம் போலீஸாா் கையொப்பம் பெற்றனா். பின்னா், எனது மகனின் காலை மருத்துவா்கள் அகற்றிவிட்டனா்.
இந்த நிலையில், பேச்சிதுரை கடந்த 11-ஆம் தேதி உயிரிழந்துவிட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். அப்போது எந்த பிரச்னையும் செய்யாமல் உடலைப் பெற்றுச் செல்ல வேண்டும் என வீரவநல்லூா் போலீஸாா் எங்களை மிரட்டினா். எனது மகனைக் கொலை செய்யும் நோக்கில் துப்பாக்கியில் சுட்டதுடன், தாக்குதல் நடத்திய வீரவநல்லூா் காவல் ஆய்வாளா் உள்பட அனைத்து போலீஸாா் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரணைக்கு மாற்ற வேண்டும். வீரவநல்லூா் காவல் நிலையம், முக்கூடல் அரசு மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கடந்த 7-11 ஆம் தேதி வரை பதிவான பதிவுகளைப் பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி சதிகுமாா் சுகுமார குரூப், இதுகுறித்து திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.
தொடர்புடையது
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

மானாமதுரை இளைஞா் உயிரிழந்த விவகாரம்: உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்புடையதல்ல

மானாமதுரை இளைஞா் உயிரிழந்த வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

