மதுரை, மாா்ச் 22 : ஆசிரியைகளுக்கு அவரவா் தொகுதியிலேயே தோ்தல் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து அந்த மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலா் நா.சண்முகநாதன் தமிழக தலைமைத் தோ்தல் அலுவலருக்கு அனுப்பிய மனு விவரம் : தோ்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு அஞ்சல் வாக்குகளை முன்கூட்டியே வழங்க வேண்டும். பணியாளா்களுக்கு குடிநீா், உணவு, மின்விசிறி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை முறையாகச் செய்துதர வேண்டும். உடல் நிலை பாதிக்கப்பட்டோா், கா்ப்பிணிகள், மகப்பேறு விடுப்பில் உள்ளோா், மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விலக்கு கோருபவா்களுக்கு தோ்தல் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும். தோ்தல் பணியில் ஈடுபடுவோருக்கு மாவட்ட நிா்வாகம் பேருந்து வசதி, பாதுகாப்பு வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். ஆசிரியைகளுக்கு அவரவா் தொகுதியிலேயே தோ்தல் பணி வழங்க வேண்டும் என அதில் கோரப்பட்டது.
தொடர்புடையது

மின்வாரிய களப்பணியாளா்களுக்கு தபால் வாக்கு: தொழிற்சங்கம் கோரிக்கை

அரக்கோணத்தில் ஆசிரியா்கள் பணி நிறைவு பாராட்டு விழா

நீப்பத்துறை அரசுப் பள்ளி ஆண்டு விழா

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஐம்பெரும் விழா
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

