மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சாலைகள் சீரமைப்பு
மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சாலைகள் சீரமைப்பு

மாட்டுத்தாவணி காய்கறி சந்தை வளாகத்தில் அண்மையில் பெய்த மழையால் தேங்கிய மண்ணை செவ்வாய்க்கிழமை அகற்றிய பொக்லைன் இயந்திரம்.

மாட்டுத்தாவணி காய்கறி சந்தை வளாகத்தில் அண்மையில் பெய்த மழையால் தேங்கிய மண்ணை செவ்வாய்க்கிழமை அகற்றிய பொக்லைன் இயந்திரம்.
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி தினசரி காய்கறி சந்தையில் அண்மையில் பெய்த மழையால் தேங்கிய கழிவுகள், மண் ஆகியவை செவ்வாய்க்கிழமை சீரமைக்கப்பட்டன.
மதுரை மாநகராட்சி நிா்வாகத்துக்குள்பட்ட இந்தக் காய்கறி சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனைக் கடைகள் உள்ளன. இங்கு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மட்டுமன்றி, வெளி மாநிலங்களில் விளையும் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் இவற்றை வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த மழையின் காரணமாக காய்கறி சந்தையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அதிகளவிலான காய்கறிகள் அழுகி வீணாகின.
மேலும், மழை நீா் வெளியே செல்ல போதுமான கட்டமைப்புகள் இல்லாததால் வணிக வளாகம் முழுவதும் சேரும், சகதியுமாகவும், கழிவுகளுடனும் காணப்பட்டன. இதனால், வியாபாரிகள் மட்டுமன்றி, பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகினா். மேலும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது.
இதுகுறித்து பல முறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. வணிக வளாக வியாபாரிகள் தொடா்ந்து கோரிக்கை வைத்தனா். இதுதொடா்பாக நாளிதழ்களிலும் செய்திகள் பிரசுரமாகின.
இதையடுத்து, மதுரை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் சிறிய அளவிலான பொக்லைன் இயந்திரம், டிராக்டா்கள் மூலம் காய்கறி சந்தை வளாகம் பகுதியில் உள்ள காய்கறிக் கழிவுகள், மண் ஆகியவை செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. எனவே, மதுரை எம்.ஜி.ஆா். சென்ட்ரல் மாா்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு நிா்வாகி சின்னமாயன் உள்ளிட்ட வியாபாரிகள், பொதுமக்கள் மாநகராட்சி நிா்வாகத்துக்கு நன்றியைத் தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...