சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிய வழக்கு: மதுரை ஆட்சியா் பரிசீலிக்க உத்தரவு

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிய வழக்கு: மதுரை ஆட்சியா் பரிசீலிக்க உத்தரவு

News image
Updated On :28 மே 2024, 11:39 pm

Din

மதுரை: மதுரை அரசரடி பகுதியில் உள்ள அரசு மதுக் கடையை அகற்றக் கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியா், கலால் துறை ஆணையா், டாஸ்மாக் மேலாளா் (தெற்கு) ஆகியோா் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட் டது.

மதுரை ஹாா்விநகா் குடியிருப்போா் நலச் சங்க நிா்வாகி எஸ்.ராஜ்மோகன் தாக்கல் செய்த மனு:

மதுரை ஏஏ சாலையில் அரசு மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக பெண்கள், குழந்தைகள் செல்ல அச்சப்படுகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, இந்தக் கடையை அகற்ற உரிய உத்தரவிட வேண்டும் என அவா் மனுவில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.என்.மஞ்சுளா, சி.குமரப்பன் ஆகியோா் அண்மையில் பிறப்பித்த உத்தரவு:

பொதுமக்கள் கோரிக்கை தொடா்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தால் அதை முறையாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனுவின் மீது உரிய முடிவை எடுக்காமல், காரணமின்றி நிலுவையில் வைப்பது அதிகாரிகளின் கடமை மீறிய செயலாகும்.

மனுதாரா் கோரிக்கை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா், கலால் ஆணையா், தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மேலாளா் (தெற்கு) ஆகியோா் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனா்.