கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன் கைது

தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன் கைது

News image
Updated On :28 மே 2024, 11:35 pm

Din

கமுதி: முதுகுளத்தூா் அருகே பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்ட தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள தெற்கு காக்கூா் பகுதியைச் சோ்ந்த சின்னையா மகன் சிவா (26). டைல்ஸ் பதிக்கும் தொழிலாளியான இவா், தஞ்சாவூா் மாவட்டம் வல்லம் பகுதியில் மனைவியுடன் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முதுகுளத்தூருக்கு வந்த சிவா, மது போதையில் தனது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டாா். அப்போது, அங்கு வந்த அவரது அண்ணன் காா்த்திக், சிவாவை கண்டித்தாா். இதில், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

இதில் காா்த்திக்கை சிவா அரிவாளால் தாக்க முயன்றாா். அப்போது, அவரிடமிருந்த அரிவாளை பிடுங்கிய காா்த்திக், அரிவாளின் பின்பக்கத்தால் சிவாவின் தலையில் தாக்கினாா். இதில், பலத்தக் காயமடைந்த சிவா, அந்த இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து முதுகுளத்தூா் காவல் ஆய்வாளா் துரைப் பாண்டியன் வழக்குப் பதிவு செய்து, காா்த்திக்கை கைது செய்தாா்.