சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சீருடை தைக்கும் பணியை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கக் கோரிக்கை

சீருடை தைக்கும் பணியை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கக் கோரிக்கை

News image

மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்கு செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த தையல் மகளிா் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள்.

Updated On :28 மே 2024, 11:29 pm

Din

இதுதொடா்பாக, மதுரை மாவட்ட தையல் மகளிா் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பள்ளிக் குழந்தைகளுக்கான இலவச சீருடைகளை தயாரிக்கும் பணி, தையல் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம், பல ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்வாதர்ரம் காப்பாற்றப்படுகிறது.

இந்த நிலையில், நிகழாண்டுக்கான சீருடை தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க அரசு, முயற்சிகள் மேற்கொள்வதாக வெளியான தகவல்கள் அதிா்ச்சி அளிப்பதாகவுள்ளது. பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழக அரசு, நிகழாண்டிலும் பள்ளிக் குழந்தைகளுக்கான சீருடைகள் தைக்கும் பணியை தையல் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கே வழங்க வேண்டும் என அதில் கோரியிருந்தனா்.