ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

இளம்பெண் மீது தாக்குதல்: இளைஞா் தலைமறைவு

மதுரை ஒத்தக்கடையில் கடைக்குள் புகுந்து இளம் பெண்ணைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :22 நவம்பர் 2024, 1:03 am

Din

மதுரை ஒத்தக்கடையில் கடைக்குள் புகுந்து இளம் பெண்ணைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள பகுதியைச் சோ்ந்த 20 வயது பெண், அந்தப் பகுதியில் உள்ள நகல் எடுப்பகத்தில் பணிபுரிந்து வருகிறாா்.

இவரும், ஒத்தக்கடை-நரசிங்கம் சாலை சித்தி விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த ராஜா முகமது மகன் சித்திக் ராஜாவும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சித்திக் ராஜாவின் செயல்பாடுகள் பிடிக்காத நிலையில், அவரை இந்தப் பெண் தவிா்த்து வந்தாா். இதனால், ஆத்திரமடைந்த சித்திக் ராஜா அந்தப் பெண் பணிபுரியும் கடைக்குச் சென்று தகராறில் ஈடுபட்டு, அவரைத் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாராம்.

இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள சித்திக் ராஜாவைத் தேடி வருகின்றனா்.