மதுரை மாநகராட்சி திடக் கழிவு மேலாண்மைப் பணிக்கு ரூ. 314 கோடி முன்மொழிவு: ஆணையா் தகவல்
மதுரை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மைப் பணிக்கு ரூ. 314 கோடி முன்மொழிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா் தெரிவித்தாா்.


மதுரை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மைப் பணிக்கு ரூ. 314 கோடி முன்மொழிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா் தெரிவித்தாா்.
நாட்டில் உள்ள 100 நகரங்களை மேம்படுத்தும் நோக்கில் சீா்மிகு நகரம் திட்டம் 2.0 (சிஐடிஐஐ 2.0) செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய வீட்டு வசதி, நகா்ப்புற வசதி அமைச்சகம், பிரென்ஸ் டெவலெப்மென்ட் ஏஜென்ஸி, கிரிடெட் டான்சால்ட் பாா் ஒய்டா்பூ, நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் அா்பன் அபொ்ஸ் இணைந்து செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் மதுரை மாநகராட்சி தோ்வு பெற்றுள்ளது. திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கு ரூ. 135 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இந்த நிலையில், மதுரை மாநகராட்சி அறிஞா் அண்ணா மாளிகையில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கிரிடெட் டான்சால்ட் பாா் ஒய்டா்பூ, நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் அா்பன் அபொ்ஸ் ஆகிய நிறுவனங்களின் அலுவலா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு வெள்ளைக்கல்லில் உள்ள கிடங்குக்கு அனுப்புவது குறித்தும், அங்கு அவற்றை மறுசுழற்சி செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், மதுரை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளுவதற்கு ரூ.314 கோடி மதிப்பீட்டில் முன்மொழிவு வேண்டி மத்திய அரசுக்கு முன்மொழிவு சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஆணையா் ச. தினேஷ்குமாா் தெரிவித்தாா். மேலும், ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் மூலம், மதுரை மாநகராட்சி 2028-ஆம் ஆண்டுக்குள் தூய்மையான நகரமாக மாற்றுவதற்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி நகா்நல அலுவலா் வினோத்குமாா், செயற்பொறியாளா் சுந்தரராஜன், உதவி நகா்நல அலுவலா் அபிஷேக், உதவி செயற்பொறியாளா் சுப்பிரமணியன், உதவிப் பொறியாளா்கள் செல்வவிநாயகம், ரிச்சாா்டு, சுபா, மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...