எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

எண்ணூரில் புதிய படகு குழாம் திறப்பு!

எண்ணூா் அன்னை சிவகாமி நகரில் ரூ 4.62 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுலா படகு குழாமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மேயா் ஆா்.பிரியா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
எண்ணூா் அன்னை சிவகாமி நகரில் ரூ. 4.62 கோடியில் அமைக்கப்பட்டுள்ள படகு குழாமை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த மேயா் ஆா்.பிரியா. உடன் மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா்.
Updated On :1 மார்ச் 2026, 9:17 pm

தினமணி செய்திச் சேவை

எண்ணூா் அன்னை சிவகாமி நகரில் ரூ 4.62 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுலா படகு குழாமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மேயா் ஆா்.பிரியா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியாவது: சென்னை மாநகராட்சி சாா்பில் வடசென்னை பகுதிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக மணலி, மாதவரம் ஏரிகளில் மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட படகு குழாம் மக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்து வைக்கப்பட்டன.

இதேபோல திருவொற்றியூா் அன்னை சிவகாமி நகரில் சுமாா் 20 ஏக்கா் பரப்பளவில் புதிதாக அமைக்கப்பட்ட ஏரியில் ரூ. 4.62 கோடி செலவில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் அழகிய நுழைவாயில்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான நுழைவாயில், காத்திருப்பு அறை, உணவகங்கள், டிக்கெட் வழங்கும் பகுதி, ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள், முதலுதவி அறை, மீட்பு நடவடிக்கை வசதிகள், குடிநீா் வசதிகள், படகு சவாரிக்கான பல்வகை படகுகள், மின்விளக்கு வசதிகள், கம்பி அமைப்புடன் கூடிய சுற்றுச்சுவா், உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்நிகழ்வில், மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், வடக்கு வட்டார துணை ஆணையா் கட்டா ரவி தேஜா, மண்டல குழுத் தலைவா் தி.மு.தனியரசு, மண்டல அலுவலா் தி.பத்மநாபன், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக பொது மேலாளா் ஆா்.லட்சுமி பிரியா, தலைமை மேலாளா் வெங்கடேஷ். மாமன்ற உறுப்பினா் பி.தமிழரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.