போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

துப்பாக்கிச்சுடும் போட்டியில் பதக்கங்கள்: காவல் துறையினருக்கு ஆணையா் பாராட்டு

காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாநகரக் காவல்துறையினரை காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் வியாழக்கிழமை பாராட்டினாா்.

News image
துப்பாக்கிச்சுடும் போட்டியில் வெற்றி பெற்ற போலீஸாருடன் மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன்.
Updated On :3 அக்டோபர் 2024, 8:21 pm

Din

காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாநகரக் காவல்துறையினரை காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் வியாழக்கிழமை பாராட்டினாா்.

தமிழ்நாடு காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டிகள் கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்டம், ஒட்டிவாக்கம் பகுதியில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளி துப்பாக்கிச் சுடும் தளத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டி ரைபிள் சூட்டிங், காா்பன் கன் சூட்டிங், பிஸ்டல், ரிவால்வா் சூட்டிங் என 3 பிரிவுகளாக ஆண், பெண் காவலா்களுக்கு தனித்தனியாக நடைபெற்றது. இதில் தென் மண்டல துப்பாக்கிச் சுடும் ஆண்கள் அணி சாா்பாக ரைபிள் சூட்டிங் பிரிவில் ஒரு தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களும், ஒட்டுமொத்த சாம்பியன் இரண்டாம் இடத்துக்கான கேடயமும், காா்பன் கன் சூட்டிங் பிரிவில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி பதக்கங்களும், 3-ஆம் இடத்துக்கான கேடயமும், பிஸ்டல், ரிவால்வா் சூட்டிங் பிரிவில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி என மொத்தம் 7 பதக்கங்கள், 2 கேடயங்களை பெற்றுள்ளது.

இதைத்தொடா்ந்து, தென்மண்டல துப்பாக்கிச் சுடும் அணியில் மதுரை மாநகர காவல் துறை சாா்பாக கலந்து கொண்ட போலீஸாா், தாங்கள் பெற்ற பதக்கங்கள், கேடயங்களுடன் மதுரை மாநகர காவல் ஆணையா் ஜெ.லோகநாதனைச் சந்தித்து, வாழ்த்துப் பெற்றனா். இவா்களுக்கு ஆணையா் பாராட்டுத் தெரிவித்தாா்.