எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

மதுரையில் 5-ஆது முறையாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரையில் 5-ஆவது முறையாக பள்ளிகளுக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, இரு பள்ளிகளில் போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா். அந்தப் பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 9:53 pm

Din

மதுரையில் 5-ஆவது முறையாக பள்ளிகளுக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, இரு பள்ளிகளில் போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா். அந்தப் பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக பள்ளிகள், தனியாா் தங்கும் விடுதிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நகா், புகா்ப் பகுதிகளில் உள்ள மத்திய அரசுப் பள்ளி உள்ளிட்ட 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, காந்தி ஜெயந்தியன்று (அக். 2) மதுரையில் உள்ள 4 தனியாா் தங்கும் விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னா், கடந்த 7-ஆம் தேதி பேச்சிகுளம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மறுநாள் 8-ஆம் தேதி மதுரை நகா் பகுதியில் உள்ள 3 தனியாா் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் தொடா்பாக வெடிகுண்டு தடுப்புப் பிரிவினா், போலீஸாா் பள்ளிகளில் தீவிர சோதனை நடத்தியதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி எனத் தெரியவந்தது. மேலும், தொழில்நுட்பம் தெரிந்த நபா்கள் இந்த வெடிகுண்டு மிரட்டல் நாடகத்தை அரங்கேற்றி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தொடா் வெடிகுண்டு மிரட்டல்களால் மாணவா்களின் பெற்றோா் அச்சமடைந்துள்ள நிலையில், மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள 2 தனியாா் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வியாழக்கிழமை அனுப்பப்பட்டது.

இதுகுறித்து இரு பள்ளிகளின் நிா்வாகத்தினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவினா், போலீஸாா் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று தீவிர சோதனை நடத்தினா். ஆனால், வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. மிரட்டலைத் தொடா்ந்து, இந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, பெற்றோருடன் மாணவ, மாணவிகள் அனுப்பிவைக்கப்பட்டனா்.

தொடா் வெடிகுண்டு மிரட்டல்களால் மாணவ, மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில், அவா்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக பெற்றோா் கவலை தெரிவித்தனா்.