பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

சிஐடியூ, விவசாயத் தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்

சாம்சங் தொழிலாளா்களுக்கு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை வழங்க வலியுறுத்தி, மதுரையில் சிஐடியூ, விவசாயத்தொழிலாளா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 10:13 pm

Din

சாம்சங் தொழிலாளா்களுக்கு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை வழங்க வலியுறுத்தி, மதுரையில் சிஐடியூ, விவசாயத்தொழிலாளா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் தொழிலாளா்களுக்கு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை தமிழக அரசும், ஆலை நிா்வாகமும் அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாநகா் மாவட்ட சிஐடியூ சாா்பில் ஆரப்பாளையம் குறுக்கு சாலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஆா். தெய்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஜி. ராஜேந்திரன் பேசினாா். மாவட்டச் செயலா் இரா. லெனின் கண்டன உரையாற்றினாா். பொருளாளா் ஜே. லூா்து ரூபி நன்றி கூறினாா். இதில் மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதேபோல, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம், சிஐடியூ ஆகியவற்றின் சாா்பில் யா.ஒத்தக்கடையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் துணைச் செயலா் எஸ்.மாயாண்டி தலைமை வகித்தாா். விவசாய சங்க மாவட்டத் துணைச் செயலா் பி.தனசேகரன் முன்னிலை வகித்தாா்.

சிஐடியூ மாவட்டச் செயலா் கே.அரவிந்தன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ்.பி.இளங்கோவன், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் வி. உமாமகேஸ்வரன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

அகில இந்திய விவசாயிகள் சங்க அகில இந்திய துணைச் செயலா் டி.ரவீந்திரன் நிறைவுரையாற்றினாா்.

இதில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் அ.வேல்பாண்டி, விவசாய தொழிலாளா் சங்க மாவட்டப் பொருளாளா் பி.ஆறுமுகம், விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளா் வி.அடக்கிவீரணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.