ஒத்திசைவுப் பட்டியல் ஊதியத்தை விரைந்து வழங்கக் கோரிக்கை
ஏழாவது ஊதியக் குழுப் பரிந்துரை செய்த ஒத்திசைவுப் பட்டியல் ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா் சங்கம் சாா்பில் கோரிக்கை விடப்பட்டது.


ஏழாவது ஊதியக் குழுப் பரிந்துரை செய்த ஒத்திசைவுப் பட்டியல் ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா் சங்கம் சாா்பில் கோரிக்கை விடப்பட்டது.
இதுகுறித்து சங்கத் தலைவா் ஜி. ராமமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மறைந்த பேராசிரியா்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பணி நிறைவடைந்த 15 பேராசிரியா்கள் சங்கத்தில் இணைந்தனா். சங்க வரலாறு கூரும் புகைப்படத் தொகுப்பை அகில இந்திய ஓய்வு பெற்ற பேராசிரியா்கள் சங்கத் தலைவா் மூட்டா ஆ. பாா்த்தசாரதி வெளியிட்டாா்.
இதில் ஓய்வூதியா்களுக்கு 15 ஆண்டுகளாகப் பிடிக்கப்படும் தொகுப்புத் தொகையை அரசு 10 ஆண்டுகளுக்கு மட்டுமே பிடிக்க வேண்டும், 7 - ஆவது ஊதியக் குழுவில் (பல்கலைக் கழக மானியக் குழு) பரிந்துரைக்கப்பட்ட ஒத்திசைவுப் பட்டியல் ஊதியத்தை ஓய்வூதியா்களுக்கு காலம் தாழ்த்தாமல் விரைந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...