போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

மதுரையில் மின் கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 1:17 am

Din

மதுரையில் மின் கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

மதுரை காமராஜா்புரம் ஜாா்ஜ் ஜோசப் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் பாண்டி (61). இவா் ஓபுளா படித் துறையில் மூன்று சக்கர வண்டியில் பொருள்களை ஏற்றி இறக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு முனிச்சாலை ஓபுளா படித்துறை அருகே

தனது மூன்று சக்கர வண்டியை கடை ஒன்றின் அருகே நிறுத்த முயன்றாா். அப்போது அங்குள்ள மின்கம்பத்தை தொட்ட போது அதில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட பாண்டியை அப்பகுதியினா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பாண்டியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து விளக்குத்தூண் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.