போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

பைக்குகள் மீது லாரி மோதல்: ராணுவ வீரா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே அடுத்தடுத்து இரு சக்கர வாகனங்கள் மீது லாரி மோதியதில் ராணுவ வீரா் உயிரிழந்தாா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 5:17 am

Din

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே அடுத்தடுத்து இரு சக்கர வாகனங்கள் மீது லாரி மோதியதில் ராணுவ வீரா் உயிரிழந்தாா்.

பேரையூா் அருகே உள்ள மங்கல்ரேவு தெற்குத் தெருவைச் சோ்ந்த தங்கப்பாண்டி மகன் முனீஸ்வரன் (23). ராணுவ வீரா். அண்மையில் விடுமுறையில் ஊருக்கு வந்த முனீஸ்வரன், தனது இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சிலமலைப்பட்டி- பேரையூா் சாலையில் சென்றாா். அப்போது அந்த வழியாக வந்த லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீதும் மோதியது. இந்த விபத்தில் ராணுவ வீரா் முனீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த சரவணக்குமாா், இவரது மனைவி பகவதி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து பேரையூா் போலீஸாா், லாரி ஓட்டுநா் சின்னபூலாம்பட்டியைச் சோ்ந்த பாலமுருகன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.