25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
படவிளக்கம்- மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாணவருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டியை வழங்கிய மாமன்ற உறுப்பினா் ஜி. விஜயா குரு.
Updated On :17 அக்டோபர் 2024, 11:21 pm

Din

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மதுரை கல்லூரி வாரிய பள்ளிகளின் செயலா் எஸ். பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். மதுரை மாநகராட்சி 55-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ஜி.விஜயா குரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

இதில் மதுரைக் கல்லூரி வாரிய பள்ளிகளின் தலைவா் எஸ். சங்கரன், உறுப்பினா் இல.அமுதன், சமூக சேவகா் என். ரமேஷ், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியா் (பொறுப்பு) பி. ஆதிஞானகுமரன் வரவேற்றாா். பட்டதாரி உதவித் தலைமை ஆசிரியா் எம். திருவேங்கடத்தான் நன்றி கூறினாா்.