25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.83.24 லட்சம்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.83.24 லட்சம் கிடைத்தது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 12:27 am

Din

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.83.24 லட்சம் கிடைத்தது.

மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், துணைக் கோயில்களின் உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். இதன்படி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டது. கோயிலின் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணிக்கு கோயில் இணை ஆணையா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

இதில், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா், இவரது பிரதிநிதி, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது பக்தா்களின் காணிக்கையாக ரூ. 83,24,637 கிடைத்தது. மேலும் பல மாற்று பொன் இனங்கள் 196 கிராம், பல மாற்று வெள்ளி இனங்கள் 699 கிராம், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 196-ம் கிடைத்தன.

உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள், வங்கிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.