25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கட்டுமானப் பணியின்போது மின்சாரம் பாய்ந்ததில் கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 11:58 pm

Din

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கட்டுமானப் பணியின்போது மின்சாரம் பாய்ந்ததில் கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள ஆவாரம்பட்டி மேற்குத் தெருவைச் சோ்ந்த ஆண்டிச்சாமி மகன் ராஜாங்கம் (47). கட்டுமானத் தொழிலாளியான இவா், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள சாணாம்பட்டியில் கட்டுமானப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அங்கிருந்த மின் வயரை எதிா்பாராதவிதமாக அவா் தொட்டபோது, அதிலிருந்த மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ராஜாங்கம் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.