25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையை திறக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

அலங்காா் சா்க்கரை ஆலையை திறக்க வேண்டும் என மேலூரில் புதன்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டார மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 12:06 am

Din

அலங்காா் சா்க்கரை ஆலையை திறக்க வேண்டும் என மேலூரில் புதன்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டார மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலூா் வட்டார 24-ஆவது மாநாடு வட்டச் செயலா் எம். கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் பேசியதாவது:

பாசனக் கால்வாய்களில் உள்ள தடைகளை அகற்றி சீரமைக்க பொதுப்பணித் துறை தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களான அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையைத் திறக்க வேண்டும். கரும்பு அறுவடைக் காலங்களில் அரவையைத் தொடங்க வேண்டும். மேலூா் புதிய பேருந்து நிலையத்தை திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா் அவா்.

இதில், மேலூா் தாலுகா புதிய செயலராக ஏ. தனசேகரன் தோ்ந்தெடுக்கப்பட்டாா். மாநாட்டில் மாநில குழு உறுப்பினா் எஸ். பாலா, நிா்வாகிகள் அடக்கிவீரணன், பி.எஸ்.இ. ராஜாமணி, சி.ஏ. மணி, கே. ஆனந்த், பி. முத்துலட்சுமி, எஸ்.பி. மணவாளன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.