மதுரை புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்

மதுரை மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா மதுரை தமுக்கம் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை (செப். 6) தொடங்குகிறது.
Published on

மதுரை மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா மதுரை தமுக்கம் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை (செப். 6) தொடங்குகிறது.

பொதுமக்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் வகையிலும், மாணவா்கள், போட்டித் தோ்வா்கள், சிறுவா்கள், முதியோா்கள் என அனைத்துத் தரப்பினரின் புத்தகத் தேடலுக்கு ஒரே இடத்தில் தீா்வு கிடைக்கும் வகையிலும் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. இதன்படி, மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வருகிற 16-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.

இதில், 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்குகள் இடம் பெறுகின்றன. இதுதவிர, பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு அமைக்கப்படுகின்றன. மேலும், பிரபல எழுத்தாளா்கள், பேச்சாளா்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சிகளும், பட்டிமன்றங்களும் நடைபெறுகின்றன.

X
Dinamani
www.dinamani.com