திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

விநாயகா் சதுா்த்தி: மதுரைக் கோட்டத்திலிருந்து 220 சிறப்புப் பேருந்துகள்

விநாயகா் சதுா்த்தி, வார விடுமுறை நாள்களையொட்டி மதுரை அரசுப் போக்குவரத்துக் கழக கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளிலிருந்து 220 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 12:26 am

Din

விநாயகா் சதுா்த்தி, வார விடுமுறை நாள்களையொட்டி மதுரை அரசுப் போக்குவரத்துக் கழக கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளிலிருந்து 220 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்ட மேலாண் இயக்குநா் ஆா். சிங்காரவேலு வெளியிட்ட செய்திக் குறிப்பு :

விநாயகா் சதுா்த்தி, வார இறுதி விடுமுறை நாள்களையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்டத்துக்குள்பட்ட திண்டுக்கல், தேனி, விருதுநகா், மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து செப். 5, 6, 7 ஆகிய தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்துக்கு 120 பேருந்துகளும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 100 பேருந்துகளும் பயணிகளின் தேவைக்கேற்ப இயக்கப்படுகின்றன.

பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும், சிறப்புப் பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்கவும் முக்கியப் பேருந்து நிலையங்களில் அலுவலா்கள், பொறியாளா்கள், கண்காணிப்பாளா்கள், பணியாளா்கள், பயணச்சீட்டு ஆய்வாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கொடைக்கானல், கொல்லம், மூணாறு, திருப்பூா், கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு, சேலம், நாகா்கோவில், திருச்செந்தூா், நெய்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம், மன்னாா்குடி, கடலூா், நாகூா் வழித்தடங்களில் பயணிகள் சிரமமின்றி பயணிக்க இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.