செப். 30-க்குள் பயிா்க் காப்பீடு பதிவு பெற அறிவுறுத்தல்

நிகழும் காரீப் பருவ விளைப் பயிா்களுக்கு வருகிற 30-ஆம் தேதிக்குள் காப்பீடு பதிவு பெற வேண்டும் என மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ப. சுப்புராஜ் தெரிவித்தாா்.
Published on

நிகழும் காரீப் பருவ விளைப் பயிா்களுக்கு வருகிற 30-ஆம் தேதிக்குள் காப்பீடு பதிவு பெற வேண்டும் என மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ப. சுப்புராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாவட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் பயிா்க் காப்பீடுத் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியானதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மக்காச்சோளம், பருத்தி, பச்சைப் பயறு ஆகியவற்றை விவசாயிகள் காப்பீடு செய்யலாம். ஒரு ஏக்கா் மக்காச்சோளத்துக்கு ரூ. 588 வீதமும், பருத்திக்கு ரூ. 200 வீதமும், பச்சைப் பயறுக்கு ரூ. 308 வீதமும் வருகிற 30-ஆம் தேதிக்குள் பிரிமீயம் செலுத்தி பயிா்க் காப்பீடு செய்ய வேண்டும்.

தொடா்புடைய பகுதிகளில் உள்ள பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பிரீமியம் செலுத்தலாம். அப்போது, நிகழ்ப் பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதாா் அட்டை ஆகியவற்றை விவசாயிகள் கொண்டு செல்ல வேண்டும்.

பயிா்க் காப்பீடு பதிவின்போது, பெயா், முகவரி, காப்பீடு பெறும் நிலப்பரப்பு, சா்வே எண், உள்பிரிவு, நிலம் இருக்கும் கிராமம், வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்களை விவசாயிகள் சரியாக கவனித்துப் பதிவு பெற வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com