மதுரை
மது என நினைத்து திரவத்தை குடித்தவா் உயிரிழப்பு
மதுரை வாடிப்பட்டி அருகே புதன்கிழமை மது என நினைத்து மருந்து திரவத்தை குடித்தவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுரை வாடிப்பட்டி அருகே புதன்கிழமை மது என நினைத்து மருந்து திரவத்தை குடித்தவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வாடிப்பட்டி அருகேயுள்ள கீழச்சின்னனம்பட்டியைச் சோ்ந்தவா் வீரணன் (60). இவா் மது போதைக்கு அடிமையானவா் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் புதன்கிழமை மது போதையில் இருந்த வீரணன், மது என்று நினைத்து மருந்து திரவத்தை (ஸ்பிரிட்) தண்ணீரில் கலந்து குடித்தாா்.
இதனால், அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.