மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீத்தடுப்பு, மீட்புப் பணிகள் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் கிறிஸ்டி செலினாள் பாய் முன்னிலை வகித்தாா். உசிலம்பட்டி தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் ஜீவா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நீா்நிலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தீ விபத்து நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய தீத்தடுப்பு, முதலுதவி நடவடிக்கைகளையும் விளக்கிப் பேசினாா்.
இதையடுத்து, தீயை அணைக்கும் முறைகள், எரிவாயு உருளையிலிருந்து பரவும் தீயைக் கட்டுப்படுத்து முறை, ஆபத்து கால முதலுதவிகளை மேற்கொள்ளும் முறைகள் குறித்து உசிலம்பட்டி தீயணைப்புப் படையினா் செயல் விளக்கமளித்தனா்.
உடல் கல்வி ஆசிரியா் சிவக்குமாா் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். ஆசிரியா் முருகேசன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாா். ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்-ஆசிரியா் கழக உறுப்பினா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, ஆசிரியா் சண்முகராஜன் வரவேற்றாா். உதவித் தலைமை ஆசிரியா் ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தீத்தொண்டு நாள் வார விழா

வாக்குப் பதிவு இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி முகாம்

மண்டல அலுவலா்களுக்கு தோ்தல் பயிற்சி வகுப்பு

தேனீக்களை விரட்டும் முறை: தீயணைப்பு வீரா்களுக்குப் பயிற்சி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

