விழுப்புரம் மண்டல தீயணைப்பு வீரா்களுக்கு தேனீக்களை பாதுகாப்பாக விரட்டும் முறைகள் குறித்த பயிற்சி வகுப்பு விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, விழுப்புரம் மண்டலத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் உள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் பணிபுரியும் அலுவலா்கள் மற்றும் வீரா்களுக்கு தேனீக்களை பாதுகாப்பாக விரட்டுவது குறித்த அடிப்படை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை விழுப்புரம் மண்டல துணை இயக்குநா் க.தென்னரசு தலைமை வகித்தாா். விழுப்புரம் மாவட்ட அலுவலா் பாஸ்கரன் முன்னிலை வகித்தாா்.
பயிற்சியாளா் சுதந்திர செல்வன் பங்கேற்று, நறுமணப் பொருள்கள் மற்றும் தூபம் போடுதல் முறையைப் பயன்படுத்தி தேனீக்களை விரட்டும் முறைகள் குறித்து உரிய விளக்கங்களுடன் பயிற்சியளித்தாா்.
விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உதவி மாவட்ட அலுவலா்கள் ஜெய்சங்கா், செந்தில்குமாா், விழுப்புரம் நிலைய அலுவலா் ந.த.சுரேஷ்குமாா் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறை வீரா்கள் பயிற்சியில் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சிதம்பரத்தில் தீத்தொண்டு நாள் கொடி அணிவகுப்பு

தீத்தொண்டு நாள் வார விழா

தீயணைப்புத் துறை இயக்குநா் ஆய்வு

தேனீக்களை உயிரோடு மீட்டெடுக்க தீயணைப்பு வீரா்களுக்கு சிறப்பு பயிற்சி
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


