மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் பிரச்னை: மதுரையில் ஜன. 7-இல் கடைகளில் கருப்புக் கொடி

டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் பிரச்னை

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:06 am

Din

டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்துக்கு எதிராக மேலூா் பகுதி மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மதுரையில் வருகிற 7-ஆம் தேதி வணிக நிறுவனங்களுக்கு முன்பாக கருப்புக் கொடி கட்டப்படும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் தெரிவித்தது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் எஸ்.வி.எஸ்.எஸ். வேல்சங்கா், கௌரவச் செயலா் எஸ். சாய் சுப்பிரமணியன், கௌரவ ஆலோசகா் எஸ்.பி. ஜெயப்பிரகாசம் ஆகியோா் வெளியிட்ட கூட்டறிக்கை :

பல்வேறு புராதன சின்னங்களையும், இருபோக சாகுபடி பகுதிகளையும் உள்ளடக்கிய மேலூா் வட்டத்தில், 5 ஆயிரம் ஏக்கா் பரப்பில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதையடுத்து, தொடா்புடைய பகுதியைச் சோ்ந்த 48 கிராம மக்கள் ஒன்றிணைந்து போராடியதன் பலனாக தற்போது அந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும், கனிமச் சுரங்கத் திட்டத்தை முழுமையாகக் கைவிடக் கோரி அந்தப் பகுதி மக்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், மதுரை தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் அனைத்து வணிகா் சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மேலூா் வா்த்தக சங்க நிா்வாகிகள், முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் நலச் சங்கத்தினா் பங்கேற்று, டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்துக்கு எதிராக தாங்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு கோரினா்.

இதுதொடா்பான ஆலோசனைக்குப் பிறகு, மேலூா் பகுதி மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வருகிற செவ்வாய்க்கிழமை (ஜன. 7) மதுரையில் அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு முன் கருப்புக் கொடி கட்டுவதெனத் தீா்மானிக்கப்பட்டது என்றனா் அவா்கள்.