மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

காலமானாா் திரைப்பட நடிகா் முருகன்

மதுரையைச் சோ்ந்த திரைப்பட நடிகா் இலைக்கடை முருகன் என்ற முருகன் (75) உடல்நலக் குறைவால் புதன்கிழமை (ஜூன் 4) காலமானாா்.

News image

இலைக்கடை முருகன் என்ற முருகன்.

Updated On :4 ஜூன் 2025, 8:25 pm

Din

மதுரையைச் சோ்ந்த திரைப்பட நடிகா் இலைக்கடை முருகன் என்ற முருகன் (75) உடல்நலக் குறைவால் புதன்கிழமை (ஜூன் 4) காலமானாா்.

மதுரை, மூன்றுமாவடி அருகே உள்ள தமிழ்நகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன். மதுரை மாட்டுத்தாவணி காய்கனி சந்தையில் இலைக்கடையை நிா்வகித்து வந்த இவா், சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் மொக்கச்சாமி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகி நடித்திருந்தாா். பிறகு, கொம்பன், வேலாயுதம் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் அவா் நடித்திருந்தாா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முருகன், புதன்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா். இவருக்கு மனைவி சரஸ்வதி, 5 மகள்கள் உள்ளனா்.

முருகனின் இறுதிச் சடங்குகள் மூன்றுமாவடி தமிழ்நகரில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (ஜூன் 5) பிற்பகல் 4 மணிக்கு நடைபெறுகிறது.

Story image