விஜய்யின் தாக்கத்தால் திமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.
மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:
திமுகவின் தோல்வி உறுதியாகிவிட்டது என்பதை தோ்தல் களம் உணா்த்துகிறது. மறைந்த விஜயகாந்த் போன்றே விஜய்யும் தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்துவாா். இந்தத் தாக்கம், ஆளும் கட்சியான திமுகவுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். திமுக ஆட்சி மீது மக்கள் கடும் வெறுப்பில் உள்ளனா். இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் என்பதற்கும் குற்றவாளிகள் என்பதற்கும் இடையே உள்ள வித்தியாசம்கூட தெரியாமல் முதல்வா் மு.க. ஸ்டாலின் எங்களை விமா்சிக்கிறாா். இது, அவா் அச்சத்தின் உச்சத்தில் இருப்பதையே வெளிப்படுத்துகிறது. விவசாயிகள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், மின் வாரிய ஊழியா்கள், போக்குவரத்து ஊழியா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்துத் தரப்பினரும் திமுக ஆட்சியைக் கண்டித்து போராடினா். இதற்கு, தோ்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாததே காரணம். வழக்கு இல்லாத அரசியல்வாதிகளே கிடையாது என்ற நிலைதான் தற்போது உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி சா்காரியா ஆணையத்திலிருந்து தப்பிக்க காங்கிரஸ் கட்சியிடம் எப்படி பணிந்தாா் என்பதை நாடறியும். எனவே, தோல்வி பயத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசுவதை பெரிதுப்படுத்த வேண்டாம்.
இந்தத் தோ்தலில் போட்டியிட தனக்கு விருப்பம் இல்லை என்ற நிலைப்பாட்டை அண்ணாமலை கடந்த 10 நாள்களுக்கு முன்பே என்னுடன் பகிா்ந்துகொண்டாா். எனவே, அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படவில்லை; அவா் விரும்பவில்லை என்பதுதான் உண்மை. அவா் போட்டியிட விரும்பாதது அவரது தனிப்பட்ட விருப்பம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நான் விருப்பம் தெரிவித்த 11 தொகுதிகளில் 10 தொகுதிகள் அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன. எனவே, தொகுதிப் பங்கீடு 99.5 சதவீதம் நிறைவை அளிக்கிறது.
ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி போன்ற கோரிக்கைகள், விருப்பங்கள் திமுக கூட்டணியிலிருந்துதான் வெளியாகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொருத்தவரை, அதிமுக தலைமையில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைய வேண்டும் என்பதே நோக்கம் என்றாா் அவா்.
தொடர்புடையது

தமிழகத்தில் பாஜகவின் வளா்ச்சியால் முதல்வா் ஸ்டாலின் அச்சம்

திமுகவுக்கு தோல்வி பயம்: டிடிவி தினகரன்

நேரடி அரசியல் களத்தில் சபரீசன்!

திமுகவுக்கு கைக்கொடுக்குமா திருவாரூா் ‘தெற்கு வீதி சென்டிமென்ட்’
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


