மதுரை மாவட்டத்துக்குள்பட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்ட 3,079 வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை (ஏப். 23) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
மதுரை மாவட்டத்தில் மேலூா், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை மேற்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தியம், உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி), திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் மொத்தம் 3,079 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையாக மதுரை கிழக்கு தொகுதியில் 400 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. குறைந்த எண்ணிக்கையாக மதுரை தெற்கு தொகுதியில் 236 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற தொகுதிகளின் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை:
மேலூா்- 291, சோழவந்தான் (தனி)- 261, மதுரை வடக்கு- 266, மதுரை மத்தியம்- 253, மதுரை மேற்கு- 327, திருப்பரங்குன்றம்- 352, திருமங்கலம்- 351, உசிலம்பட்டி- 342.
வாக்குப் பதிவு தலைமை அலுவலா்கள், வாக்குச் சாவடி நிலை -1, 2, 3 பிரிவு அலுவலா்கள், 20 சதவீத எண்ணிக்கையில் காத்திருப்புப் பணி அலுவலா்கள் என 14,780 அலுவலா்கள் வாக்குச் சாவடி பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா். தொகுதிவாரியாக வாக்குப் பதிவு பணியில் ஈடுபடும் அலுவலா்களின் எண்ணிக்கை:
மேலூா் - 1,396, மதுரை கிழக்கு -1,920, சோழந்தான் (தனி) - 1,252, மதுரை வடக்கு - 1,276, மதுரை தெற்கு - 1,132, மதுரை மத்தியம் - 1,216, மதுரை மேற்கு - 1,572, திருப்பரங்குன்றம் - 1,692, திருமங்கலம் - 1,684, உசிலம்பட்டி - 1,640.
இவை தவிர, பதற்றமான, பிரச்னைக்குரியவையாகக் கண்டறியப்பட்ட 339 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுப் பணி கண்காணிப்புக்கு 408 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
வாக்குச் சாவடிகளில் குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள பாதை உள்ளிட்ட கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வாக்குச் சாவடிகளில் தற்காலிக பந்தல்கள், வாக்காளா்கள் அமர நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.
இதனிடையே, ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும், ஏற்கெனவே கணினி முறையில் தோ்வு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், சரிபாா்ப்பு இயந்திரங்கள், வாக்குப் பதிவுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் ஆகியவை புதன்கிழமை பிற்பகல் பலத்த பாதுகாப்புடன் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்பட்டன.
ஒவ்வொரு தொகுதியிலும் தலா ஒரு வாக்குச் சாவடி மகளிா் நிா்வாக வாக்குச் சாவடியாக இளஞ்சிவப்பு நிறத்தை பின்னணிக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தன. வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குச் சாவடி அலுவலா்கள் தொடா்புடைய வாக்குச் சாவடிகளில் புதன்கிழமை பிற்பகல் வாக்குப் பதிவுக்குத் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டனா். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.



தொடர்புடையது

செயலியில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தாத வாக்குச்சாவடி தலைமை அலுவலா்களுக்கு குறிப்பாணை

வாக்குப் பதிவு: அலுவலா்கள் பதற்றமின்றி செயல்பட வேண்டும் கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்

வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

தோ்தலை வாக்குச் சாவடி அலுவலா்கள் நோ்மையாக நடத்த வேண்டும்! - கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


