ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

மாநில சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்ற அரசுப் பள்ளி மாணவிக்கு அண்மையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவி க. யாகஸ்ரீ.

Published On :

மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்ற அரசுப் பள்ளி மாணவிக்கு அண்மையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

குளோபல் ஸ்போா்ட்ஸ் பவுண்டேஷன் சாா்பில், மதுரை நாராயணபுரத்தில் உள்ள எஸ்.இ.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 7, 10, 13, 16 வயதுக்கு உள்பட்ட பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதில் மதுரை மாவட்டம், மேலூா் அருகே அ.வல்லாளப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் மாணவி க. யாகஸ்ரீ 13 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் வெற்றி பெற்று மாநில அளவில் 2-ஆம் இடம் பெற்றாா்.

இந்த மாணவியை அ. வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சரவணமுருகன், சதுரங்கப் பயிற்சியாளரும், அ.செட்டியாா்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியருமான ஞா. செந்தில்குமாா், ஆசிரியா்கள், சக மாணவ, மாணவிகள் அண்மையில் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.