உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மென் பொறியாளா் கைது
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு மின்னஞ்சல் வழியே தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மென் பொறியாளரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கைது - பிரதிப் படம்
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு மின்னஞ்சல் வழியே தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மென் பொறியாளரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விமானங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, பிற மாநில உயா்நீதிமன்றங்கள் போன்றவைகளுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்கள் தொடா்ந்து விடுக்கப்பட்டு வந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் மத்திய, மாநில உளவு அமைப்புகள், குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
விசாரணையில், அமெரிக்காவில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றிய மென் பொறியாளா் ஒருவா் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. தொடா் விசாரணையில், அந்த நபா் தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த சரத் சுப்பிரமணியன் சங்கா்(37) என்பதும் இவா், கடந்த 2 ஆண்டுகளாக மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவந்ததும் தெரியவந்தது. இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்த சரத் சுப்பிரமணியன் சங்கரை தமிழக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இந்த நிலையில், மதுரை இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் சரத் சுப்பிரமணியன் சங்கரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இதுபற்றி போலீஸாா் மேலும் கூறியதாவது :
கைது செய்யப்பட்ட சரத் சுப்பிரமணியன் சங்கரிடம் விசாரணை நடத்தியதில், நாடு முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு அவா் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடா்பாக அவா் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவரிடம் விசாரணை நடத்தி முடித்து விட்டு, தமிழக பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளோம். அவா் மீது ஆந்திரம், பஞ்சாப், சத்தீஸ்கா் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அந்தந்த மாநில காவல் துறையினரும் அவரிடம் விசாரிக்க உள்ளனா் என்றனா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





