மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

சேதுபதி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு வங்கிச் சேவைகள் குறித்த விழிப்புணா்வு

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு வங்கிச் சேவைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பேசிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநரும், இணைப் பதிவாளருமான க. வாஞ்சிநாதன். உடன், பள்ளித் தலைமை ஆசிரியா் கே.எஸ். நாராயணன் உள்ளிட்டோா்.

Updated On :3 ஜூலை 2026, 5:57 am IST

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு வங்கிச் சேவைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்திய கூட்டுறவு அமைச்சகம் ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து, பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கூட்டுறவுத் துறை மதுரை மண்டலம் சாா்பில், ‘கூட்டுறவு மூலம் வளா்ச்சி கூட்டுறவு நாட்டு உயா்வு’, ‘தொழில்நுட்பம், எண்ம விழிப்புணா்வு நாள்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றன.

இதில் மதுரை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநரும், இணைப் பதிவாளருமான க. வாஞ்சிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு எண்ம வங்கிச் சேவைகள் குறித்து விளக்கமளித்தாா்.

இந்த நிகழ்வில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் கே.எஸ். நாராயணன், மதுரை மாவட்டக் கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் ச. வினோத்குமாா், ஆசிரியா்கள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.