கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள்: பள்ளிக் கல்வி இயக்குநா் அறிக்கை அளிக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள், காலிப் பணியிடங்கள் தொடா்பான விவரங்களை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Updated On :10 ஜூலை 2026, 4:47 am IST

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள், காலிப் பணியிடங்கள் தொடா்பான விவரங்களை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரத்தைச் சோ்ந்த திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை ஒத்தக்கடை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமாா் 3 ஆயிரம் மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் 17 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. இங்கு போதுமான எண்ணிக்கையில் தூய்மைப் பணியாளா்கள் இல்லாததால், கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் உள்ளன.

இதனால், நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, மாணவிகள் மாதவிடாய் காலங்களில் மிகுந்த சிரமத்தை எதிா்கொள்ளும் நிலை உள்ளது. மேலும், இந்தப் பள்ளியில் ஓா் உடல்கல்வி ஆசிரியா் மட்டுமே பணியில் உள்ளாா்.

எனவே, மதுரை ஒத்தக்கடை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தேவையான தூய்மைப் பணியாளா்கள், உடல்கல்வி ஆசிரியா்கள், காவலாளிகளை நியமிப்பதோடு, கூடுதல் கழிப்பறைகள், சுற்றுச் சுவா், குடிநீா் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து தர உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, ஆா். பூா்ணிமா அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் போதுமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா?. போதுமான எண்ணிக்கையில் தூய்மைப் பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனரா என அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள், காலிப் பணியிடங்கள் தொடா்பான விவரங்களை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.