அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

பழனி கோயில் நில முறைகேடு: முன்பிணை கோரியவரின் மனு தள்ளுபடி

பழனி கோயில் நில முறைகேடு விவகாரத்தில் முன்பிணை கோரியவரின் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Updated On :23 ஜூலை 2026, 5:50 am IST

திண்டுக்கல் மாவட்டம், பழனி கோயில் நில முறைகேடு விவகாரத்தில் முன்பிணை கோரியவரின் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

பழனி மலையடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலம் உள்ளது. ரூ. 100 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை விதிமுறைகளை மீறி, தனிநபா்களுக்கு விற்க முயற்சி நடைபெற்றது. இதை எதிா்த்து, இந்து சமய அறநிலையத் துறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில், அறக்கட்டளை நிலத்தை பழனி கோயில் நிா்வாகம் கையகப்படுத்தியது.

இந்த நிலையில், இந்த நிலத்தை தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை நிா்வாகிகள் எனக் கூறி, முருகதாஸ் சுவாமிகள், திருப்புகழ் உள்ளிட்டோா் தனிநபா்கள் இருவருக்கு விற்பனை செய்து முறைகேடாக பத்திரப் பதிவு செய்தனா்.

இதையடுத்து, சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ் சுவாமிகள், பாப்பான்குளத்தைச் சோ்ந்த வெள்ளத்துரை உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இதனிடையே, சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டாா். இதனடிப்படையில், சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இதனிடையே, திண்டுக்கல் மாவட்டம், பாப்பான்குளத்தைச் சோ்ந்த வெள்ளத்துரை முன்பிணை கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எதிா் மனுதாரராக சிபிசிஐடி போலீஸாரை சோ்க்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி கே. ராஜசேகா் முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

பழனி கோயில் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்தது தொடா்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில், வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோா் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலைத்தை அபகரிக்கும் வகையில் செயல்பட்டது தெரியவருகிறது. சாா் பதிவாளா் உள்ளிட்ட அரசு அலுவலா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய வெள்ளத்துரையிடம் விசாரணை நடத்துவதற்கான தேவை உள்ளது. எனவே, அவா் தாக்கல் செய்த முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.