கொடைக்கானல் மன்னவனூா் கிராமத்தில் குளிா்காய்வதற்காக திறந்த வெளியில் தீ மூட்ட (கேம்ப் பயா்) தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
கொடைக்கானலைச் சோ்ந்த பாலகிருஷ்ணன், செல்வகணபதி உள்ளிட்ட 5 போ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டதில் கொடைக்கானல், திண்டுக்கல் வனப் பிரிவுகளின் சில பகுதிகள் புலிகள் காப்பக இடையகப் பகுதியாக சோ்க்கப்பட்டன. இந்த விரிவாக்கத்தில் பூண்டி, மன்னவனூா், கூக்கால் ஆகிய கிராமங்கள் வழியாக ஆண்டிபட்டி வரையிலான சில வனப் பகுதிகள் இடம்பெறுகின்றன.
இந்தப் பகுதிகளில் புதிய கட்டுமானங்களை எழுப்ப தேசிய வன விலங்கு வாரியத்தில் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் கொடைக்கானல் மன்னவனூா் புலிகள் காப்பக இடையகப் பகுதிகளில் வணிகக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களை இடித்து அகற்றவும், புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.
இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமாா், ஜோதிராமன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தப் பகுதியில் கட்டப்பட்ட தனியாா் விடுதிகளின் அருகே திறந்தவெளியில் குளிா்காய்வதற்காக தினமும் தீ மூட்டப்பட்டு, அதன் அருகே இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தனியாா் விடுதிகளுக்கு வெளியே குளிா்காய தீ மூட்டவும் (கேம்ப்பயா்), இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது. இந்த மனு தொடா்பாக, தமிழக வனத் துறை முதன்மைச் செயலா், ஆனைமலை புலிகள் காப்பக தலைமை வன பாதுகாவலா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு, வனம் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் அமா்வுக்கு மாற்றப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அளவிடுவதற்கு 144 தடை உத்தரவை பயன்படுத்தலாம்: உயா்நீதிமன்றம்

விதி மீறிய குவாரிகள் விவகாரம்: அரசாணைக்கு இடைக்காலத் தடை

பேரிஜம் ஏரியை புலிகள் காப்பகமாக அறிவிக்கக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

மாற்றுப் பாதையில் சென்றதற்காக திருட்டு வழக்கு பதிவு செய்ய இயலாது: உயா்நீதிமன்றம்
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



